Saturday, June 28, 2014

"When I opened my eyes I saw Periyava standing before me!"




பெரியவாளின் நேர் காட்சி பெற்ற தேனம்பாக்கம் முருகன். தேனம்பாக்கம் பாடசாலை. பெரியவா சந்நிதி. பெரியவாளின் மேனா!


"என் பெயர் முருகன். தேனம்பாக்கத்தில் பாடசாலைல பசுக்களை பராமரிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம் .


3 வருடங்களுக்கு முன்னால் தீபாவளி காலை பால் கறக்கற நேரம் தாண்டிடுச்சி . ஆறு மணி ஏழு ...பதினொரு மணியும் ஆயிடுச்சி . பூஜை பண்றதுக்கு யாரும் வரல. கன்னுகுட்டி கத்த ஆரம்பிச்சுடிச்சு. என்னடா இது பூஜை முடிஞ்சாதான் கன்னுகுட்டியை அவுக்கமுடியும். ஆளே வரலியேன்னு கவலை பட்டுகினு அங்க ஒரு பெரிய அரசமரம் கீழ கண்ண மூடலாம்னு இருந்தேன்.

ஒரு செகண்ட்ல "கன்னுகுட்டிஎல்லாம் கத்துதுடா. நீ அவுத்துவிடு, பூஜைக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு", குரல் கேட்டுச்சு. கண்ண தொறந்து பாத்தா பெரியவர் தண்டத்தோட நிக்கிறாரு!  எனக்கு ஒடம்பெல்லாம் சிலுத்து போச்சு. ஒடனே போய் கன்னுகுட்டி எல்லாம் அவுத்து விட்டேன்.

அன்னிக்கு நைட்டு படுத்துனு இருக்கும்போது ஏதோ கால் மேல போறமாதிரி தெரிஞ்சுது . முழிச்சுபாத்தா பாம்பு. என்ன பண்றதுன்னு தெரியல . ஒரே பயமாயிடுச்சி . எங்கதான் போகுதுன்னு பார்த்தா என் பொஞ்சாதி மேல ஒரு ரவுண்டு அடிச்சுட்டு மறுபடியும் என் கால் மேல ஏறிடுச்சி . நடுங்கிட்டேன் . அடிக்கவும் முடியல. யோஜன பண்ணிட்டு இருக்கும்போது என் பக்கத்தில படம் எடுத்துட்டு கொஞ்ச நேரம் உக்கா ந்துடுச்சி. சாமிகிட்டே வேண்டிகிட்டேன் . கண்ண தொறந்து பாத்தா அது எங்கயோ போயிட்டு இருந்துது.

மறு நாளைக்கு எந்திரிச்சா ஒரே ஜுரம், தலவலி. ஒண்ணும் முடியல . இருந்தாலும் பூஜைக்கு பால் கறக்கணுமேன்னு வந்துனு இருக்கும்போது எதிர்ல பெரியவர் தண்டம் வச்சுட்டு இன்னும் ரெண்டு சாமிங்க கூட எதிர்க்க வராரு . "கொஞ்சம் ஒதுங்கி வாங்க . அவன் ராத்திரி பாம்பை பார்த்து பயந்துட்டு ஜுரத்தோட வரான்னு பெரியவர் சொல்றாரு. அந்த செகண்ட்ல ஜுரம் எங்க போச்சுன்னு தெரியல . எனக்கு நல்லாயிடுச்சி.


அது மாதிரி தொடர்ந்து பெரியவர் ரெண்டு நாள் காட்சி குடுத்தாரு!"

*****
My name is Murugan. I am the caretaker of the cows in Thenambakkam Veda Patashala. Three years back on a Deepavali day, the time for milking the cows had passed. 6, 7 am and it was now 11 am and still there was no signs of anyone to perform the pooja. The calves started to cry, out of hunger. Only after the pooja is over can I let the calves free for it to partake its mother's milk. Anxious, I decided to rest beneath a pipal tree.

Within moments I heard a voice say, "They are wailing, so let the calves go and have their milk. You may worry about the milk for the Pooja later!" When I opened my eyes to see Who was speaking, I was stunned to see Periyava standing before me, Dhandam in His Hands! I immediately released the calves to appease their hunger.

That night while asleep I felt something move over my leg. I opened my eyes and was petrified to see a snake on me. I saw it slowly head to the direction where my wife was sleeping. It went around her once and again moved up my leg. I did not dare to harm it and was not sure how to deal with it. The snake then was sitting by my side for a few seconds. I closed my eyes and started to pray in fear. When I opened my eyes I saw that it had slithered away.

The next day I woke up indisposed with fever and headache. Despite not feeling well, I got up to milk the cows for the pooja. As I was walking towards the cows, I say Periyava coming towards me, along with two other Sanyasis. "Make way for him, he saw a snake yesterday and is having fever in that state of shock", said Periyava to Them! And that very moment my fever was gone!


Periyava blessed with similar darshans for the next two days!

*****


What a blessed soul. The above incident was narrated by Shri Murugan to Shri Surya Narayan when he had visited Thenambakkam. Thanks a ton to Shri Surya Narayan for sharing it.


No comments:

Post a Comment