The man worked at Tiruchi Railway Station, had two sons and one daughter. Had utmost devotion towards Kanchi Mahaswamigal. Where ever He camped, he used to visit Him atleast 4 or five times in a year with his family. Not for an instant darshan but would stay with the Mahan for two days soaking in His blessings.
“This boy is 9 years old, need to perform Upanayanam”, he told Swamigal.
“Do it”, replied Swamigal.
“I do not know his gothram or soothram”, said the person.
Mahaswamigal looked at him.
“He is your son right?”, asked Mahaperiyava.
“No, when the boy was in his mother's womb his father passed away. His mother passed away when he was two months old. There was no one in the village to take care of the boy. We took the baby and came home; do not know his relatives or any other information regarding the boy. Just heard this much that he belongs to some Agraharam in Tirunelveli”, replied the man.
Mahaswamigal had an unusual smile on His face. Looked at Kannan ( the person who did kaingaryam to Him) who was near Him: “Look, he has adopted an orphan, has taken care of the boy for so many years and is now planning to conduct Poonal Upanayanam ceremony… how noble of him!”
Kannan said, “So long even we thought that the boy was their own son!”
Mahaswamigal was immersed in joy and said “I have heard that for those who do not know the gothram, it is Kashyapa gothram, if the soothram is not known then it is Bodhyana soothram. Do like that and conduct the poonal ceremony. But never ever think that he is a stranger; he belongs to you and is your son!”
The man took prasadam and left with contentment.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-182
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி, இரண்டு பையன்கள், ஒரு பெண்.
மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு
நாலைந்து முறை,குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஒரிரு நாள்கள் தங்கி,பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்துவிட்டுத்தான் போவார்.
"இந்தப் பையனுக்கு ஒன்பது வயசாயிடுத்து. உபநயனம் நடத்தணும்" என்று பெரியவாளிடம்
விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.
"செய்யேன்..."-பெரியவா
"பையனின் கோத்திரம் - சூத்திரம் தெரியல்லே..."
பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.
"உன்னோட பையன்தானே?"
"இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே
தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டுவிட்டுத் தாயாரும் போய்ச்சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையை ப்பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்? நாங்கள்கு ழந்தையை எடுத்துண்டு வந்தோம். ஊர், பெயர், பந்து ஜனங்கள் ரியலை. திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."
பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.
அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம்,
"பாரு..ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து, வளர்த்து,பூணல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு."
கண்ணன் சொன்னார்; "அவரோட சொந்தப்பிள்ளைனுதான்நா ங்களும் நினைத்துக் கொண்டிருக்கோம்.
பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக்கொண்டு சொன்னார்கள்;
"கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன். அது மாதிரி சொல்லிப்பூணூல் போடு. ஆனா குழந்தையை அந்நியமா நினைச்ச்டாதே. உன் பையன்தான்."
பிரசாதம் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.
Arumai!
ReplyDeleteArumai!
ReplyDelete