1) Depression --- Thirumurugatruppadai on Lord Muruga by Poet Nakkeerar (திருமுருகாற்றுப்படை)
அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.
சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு.
எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?
மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –
“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். “ என்றார்.
“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்!”,
என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.
*****
திருமுருகாற்றுப்படை - நேரிசை வெண்பாக்கள்
திருமுருகாற்றுப்படை தோன்றிய பின்னர், பிற்காலச் சான்றோர்கள்
பாடியருளிய நேரிசை வெண்பாக்கள் சில பின்வருமாறு:
"குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்!
புன்தலைய பூதப்பொரு படையாய் - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறுஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை." - - - - - - - - - - - - 1
"குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றுஅங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்!" - - - - - - - - - - - - 2
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை." - - - - - - - - - - - - 3
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்." - - - - - - - - - - - - 4
"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!" - - - - - - - - - - - - 5
"அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்." - - - - - - - - - - - - 6
"முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்." - - - - - - - - - - - - 7
"காக்க கடவியநீ காவாது இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர்வேலா! நல்ல
இடம்காண் இரங்காய் இனி!" - - - - - - - - - - - - 8
"பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரம்கூப்பி கண்குளிரக்கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே! அணிமுருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்." - - - - - - - - - - - - 9
"நக்கீரர்தாம் உரைத்த நல்முருகு ஆற்றுப்படையை
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முன்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளி
தான் நினைத்த எல்லாம் தரும்." - - - - - - - - - - - - 10
ThirumurugAtruppadai - nErisai veNpAs
"kundram eRindhAi! kuraikadalil sUr-thadindhAi!
pundhalaiyap bUdhapporu padaiyAi - endrum
iLaiyAi! azhagiyAi! ERuUrndhAn ERE!
uLaiyAi! en uLLaththu uRai." - - - - - - - - - - - - 1
["O’ Lord, you destroyed the krauncha-hill with your powerful weapon of VEl [‘lance’]!
You annihilated the demon SUrapanman, who had assumed the form of a mango-tree standing in the roaring sea!
You are the Commander of the army consisting of soldiers representing various
aspects of nature with little heads! You are an eternally Youthful One!
You are Beauty Incarnate! You are the divine son of Lord SivaperumAn, who
has the [white] bull as the vehicle! You are the Eternal One. May I humbly beseech you to abide in my heart."]
"kundram eRindhadhuvum kundrappOr seydhadhuvum
andru-angu amarar idar theerththadhuvum - indru ennaik
kaividA nindradhuvum kaRpodhumbil kAththadhuvum
meyvidA veeran-kai vEl!" - - - - - - - - - - - - 2
"It is the self-same powerful weapon of VEl in the heroic hand of the eternal
Lord Murugan, that pierced through and split open the krauncha-hill, removed the
suffering of the celestials, caused by the demon SUrapanman, rescued those
who were imprisoned in the cave by the demon, and protects me today without forsaking me."
veeravEl thAraivEl viNNOr siRaimeetta
theeravEl sevvEL thirukkaivEl - vAri
kuLiththavEl kotravEl sUr-mArbum kundrum
thuLaiththavEl uNdE thuNai." - - - - - - - - - - - - 3
["The heroic VEl, that is in the sacred hand of Lord Murugan, is sharply-pointed;
it was powerful enough to rescue the celestials from imprisonment by the demons;
it dipped into the sea and killed the demons who were hiding there; the victorious
VEl pierced through the chest of the demon SUrapanman and krauncha-hill;
that VEl is the ever-helpful-companion (to all)."]
innam orugAl enadhu idumbaik kundrukkum
kolnavil vElsUr thadindha kotravA! - munnam
panivEynedung kundrampattu uruvath thotta
thani vElai vAngkath thagum." - - - - - - - - - - - - 4
"O’ Lord, You have the weapon of VEl, whose mission is to annihilate the demons;
that VEl pierced through the krauncha-hill, which was covered by dew-and-bamboo-thickets,
and killed the demon SUrapanman! You must graciously hurl that VEl once again in
order to pierce through the mountain-like-suffering of mine!"
unnai ozhiya oruvaraiyum nambugilEn
pinnai oruvaraiyAn pinsellEn - panniru-kaik
kOlappA! vAnOr kodiyavinai theerththaruLum
vElappA! sendhil vAzhvE!" - - - - - - - - - - - - 5
"O’ Lord! I do not believe in anyone else except You; nor will ever I follow anyone
else seeking anything. You are the Lord who has the weapon of VEl that removed the
cruel suffering of the celestials! You are the Lord with twelve beautiful arms!
You are abiding at Thiruchchenthur in order to protect your beloved devotees!"
anjumugam thOndrin ARumugam thOndrum
venjamaril 'anjal!' enavEl thOndrum - nenjil
orugAl ninaikkin iru-kAlum thOndrum
'murugA!' endru OdhuvAr mun." - - - - - - - - - - - - 6
["If a person were to appear with a fearful face, Lord Murugan with six faces will appear
in front of that person. The weapon of VEl will appear in violent battle by saying ‘Do not fear!’.
If a person were to think of the Lord once and say ‘MurugA’, the two sacred feet of the Lord
will appear in front of that person!"]
muruganE! sendhil mudhalvanE! mAyOn
maruganE! eesan maganE! oru-kai mugan
thambiyE! ninnudaiya thaNdaikkAl eppozhudhum
nambiyE kai-thozhuvEn nAn." - - - - - - - - - - - - 7
[O’ Lord MurugA! Lord of Senthil [ThiruchchenthUr]! Lord who is the nephew of Lord ThirumAl!
Lord who is the divine son of Lord SivaperumAn! Lord who is the younger brother of Lord VinAyagar
with the trunk as a (fifth) hand! I worship you always with the joined-palms of my hand with
the firm belief in your sacred feet adorned with thaNdai-anklet!"]
kAkka kadaviya-nee kAvAdhu irundhakkAl
Arkkup paramAm aRumugavA! - pUkkum
kadampA! murugA! kadhirvElA! nalla
idam-kAN irangkAi ini!" - - - - - - - - - - - - 8
["O’ Lord, if you do not protect me, whose duty is it to protect me? O’ Lord ArumugavA
[one with six-faces], KadambA [one who wears the 'kadambu-flower-garland], MurugA, KathirvElA!
Now is the right time to protect me! Please consider my prayer and be graciously compassionate to me."]
parangkundril panniru-kaik kOmAn-than pAdham
karam-kUppi kaN-kuLirakkaNdu - surungkAmal
AsaiyAl nenjE! aNimurugu Atruppadaiyaip
pUsaiyAk koNdE pugal." - - - - - - - - - - - - 9
["O’ mind! Instead of shrinking with desire, you should refresh your eyes by having the sacred
vision of Lord Murugan of twelve arms abiding at Thirupparangkundram granting grace to devotees,
worship the Lord’s sacred feet with the joined-palms of your hands, and go on reciting unfailingly
and lovingly the great poem of ThirumurugAtruppadai as homage to the Lord."]
nakkeerar-thAm uraiththa nalmurugu Atruppadaiyai
thaRkOla nAL-thORum sAtrinAl - mun-kOla
mAmurugan vandhu manakkavalai theerththaruLi
thAn ninaiththa ellAm tharum." - - - - - - - - - - - - 10
["If a person were to focus his/her mind and recite daily the great poem of ThirumurugAtruppadai,
sung by the learned-poet Nakkeerar, Lord Murugan of eternal beauty, youthfulness and fragrance
will graciously appear in front of that person, remove all the suffering of the mind,
and will grant all that is desired by that person."]
Source: http://www.kaumaram.com/
2) Overall wellbeing --- Ambal Devi Aparadha Kshamapana Sthothram
'தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்’ என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று
இருக்கிறது. அதில் ‘துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு. ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது.
பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.
அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
ந மந்த்ரம்நோ யந்த்ரம் ததபி ந ஜானே ஸ்துதிமஹோ
ந சாஹ்வாநம் த்யானம் ததபிச ந ஜானேஸ் துதிகதா:
ந ஜானே முத்ராஸ்தே ததபிச ந ஜானே விலபனம்
பரம் ஜானே மாதஸ் த்வதநுஸரணம் க்லேசஹரணம்
விதேரக்ஞானேன த்ரவிண விரஹேணாலஸதயா
விதேயா சக்யத்வாத் தவ சரணயோர்யா ச்யுதிரபூத்
ததேதத் க்ஷந்தவ்யம் ஜனன ஸகலோத்தாரிணி சிவே
குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி
ப்ருதிவ்யாம் புத்ராஸ் தே ஜனனி பஹவஸ்ஸந்தி ஸரளா:
பரம் தேஷாம் மத்யே விரள தரளோஹம்தவஸூத:
மதீயோயம் த்யாகஸ் ஸமுக்த மிதம் நோ தவ சிவே
குபுத்ரோ ஜாயேத் க்வசிதபி குமாரோ ந பவதி
ஜகத்மாதர் மாதஸ்தவ சரண ஸேவா ந ரசிதா
ந வா தத்தம் தேவி த்ரவிணமபிபூயஸ் தவ மயா
ததாபி த்வம் ஸ்னேஹம் மயி நிருபமம் யத் ப்ரகுருஷே
குபுத்ரோ ஜாயேத் க்வசிதபி குமாதா ந பவதி
பரித்யக்த்வா தேவான் விவிதவித ஸேவாகுலதயா
மயா பஞ்சாசீதே ரதிக மபநீதே து வயஸி
இதானீம் சேன்மாதஸ் தவ யதி க்ருபா நாபி பவிதா
நிராலம்போ லம்போதர ஜனனீ கம்யாமி சரணம்
ச்வபாகோ ஜல்பாகோ பவதி மதுபாகோபமகிரா
நிராதங்கோ ரங்கோ விஹரதி சிரம் கோடிகனகை
தவாபர்ணே கர்ணே விசதி மநுவர்ணே பலமிதம்
ஜன: கோ ஜானீதே ஜனனீ நுபநீயம் ஜபவிதௌ
சிதாபஸ்மா லேபோ கரளமசனம் திக்படதரோ
ஜடாதாரீ கண்டே புஜக பதி ஹாரீ பசுபதி
கபாலீ பூதேசோ பஜதி ஜகதீசைக பதவீம்
பவாநி த்வந் பாணிக்ரஹண பரிபாடீ பலமிதம்
ந மோக்ஷஸ்யாகாங்க்ஷõ ந ச விபவ வாஞ்சாபி ச ந மே
விக்ஞானாபேக்ஷõ சசிமுகி ஸூகேச்சாபி ந புன
அதஸ்த்வாம் ஸம்யாசே ஜநநி யாது மம வை
ம்ருடாநீ ருத்ராணீ சிவசிவ பவாநீதி ஜபத
நாராதாஸீ விதினா விவிதோபசாரை
கிம் ரூக்ஷõசிந்தனபரைர் ந க்ருதம் வசோபி:
ச்யாமே த்வமேவ யதிகிஞ்ஞன மய்யநாதே
தத்ஸே க்ருபாமுசித மம்ப பரம் தவைவ
ஆபத்ஸூமக்ன: ஸ்மரணம் த்வதீயம்
கரோமி துர்க்கே கருணார்ணவேதி
நைதச் சடத்வம் மம பாவ யேதா
ஸூதா: க்ஷüதார்த்தா ஜனனீம் ஸ்மரந்தி
ஜகதம்ப விசித்ரமத்ர கிம்
பரிபூர்ணா கருணாஸ்தி சேன் மயி
அபராத கரம்பராவ்ருதம்
ந ஹி மாதா ஸமுபேக்ஷதே ஸூதம்
த்வத் ஸம: பாதகீ நாஸ்தி பாபாக்நி: த்வத்ஸமோ ந ஹினு
ஏவம் க்ஞாத்வா மஹாதேவீ யதா யோக்யம் ததா குருனுனு
Source: Dinamalar.com
3) Headache and overall wellbeing --- Narayaneeyam complete recital
திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார். 1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒரு வேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.
விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளை தரிசித்தார். மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்தபோது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்.
‘உனக்கு பிரஹசரணம்னா தெரியுமா?’ என்று ஸ்ரீபெரியவா கேட்டார். சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டுக்காட்டவே ஸ்ரீபெரியவா இப்படிக் கேட்பதாக இவருக்குப் புரிந்தது.
ஸ்ரீபெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பின் இவர் தன்னுடைய தலைவலி உபாதை பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூறவேண்டுமென்றும் வேண்டி வணங்கினார்.
‘உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?’ என்று ஸ்ரீபெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் ஸம்ஸ்க்ருதம் படிக்காததைக் கூறினார்.
‘நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசாகம் படிச்சுண்டு வா’ என்று அனுக்ரஹித்து அனுப்பினார்.
இவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.
‘பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்’ என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும் – இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்தப் பயம்.
‘ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு
பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.
பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.
ஆனால் தலைவலி எங்கு போனதோ? வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்தத் தலைவலி அன்று வரவேயில்லை.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு. சரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின்
தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரை எடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.
ஸ்ரீபெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார்.
நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு திருமணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும் இவர்கள் யாவரும் சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீபெரியவாளின் அருளால்தான் என்கிறார் இந்த பக்தர்.
4) Eyes --- பெற்றம் ஏறு உகந்து (Petram Yeru Uganthu)
இது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பாலாஜி நகரில் நாங்கள் குடியிருந்த போது, எதிர் வீட்டுப் பெண்மணி ஓடிவந்து, “பெற்றம் என்று வரும் தேவாரம் இருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டார். விஷயம் இதுதான். அவருடய பேரனுக்கு அம்மை போட்டிருந்து குணமான பிறகு, கண் பார்வை மங்கலாகத் தெரிவதாக்ச் சொன்னானாம்.
“பெரியவரே எல்லாம்” என்று நம்பும் அந்த பெண்மணி, உடனே, காஞ்சிக்குப் போய் பெரியவரைத் தரிசிக்கச் சென்றாராம். கூட்டம் அதிகமாக இருந்ததால், அருகில் செல்ல முடியவில்லை. அவர் ஓர் ஓரமாகt கண்களில் கண்ணீர் மல்க, “கடவுளே, எனக்கு ஒரு வழிகாட்ட வேண்டும்” என்று, மானசீகமாக வேண்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தராம்.
அப்போது ஸ்வாமிகள், கூட்டத்தினரிடம், “பெற்றம்” என்றால் என்ன தெரியுமா?”என்று கேட்க, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆண்டாள் பசுரத்தில், “பெற்றம் மேய்த் துண்ணும்” என்று வருவதாகச் சொன்னார். ஓதுவார் மூர்த்தி ஒருவரோ “பெற்றம் ஏறு உகந்து” என்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தேவாரத்தில் வருவதாகச் சொன்னார்.
காஞ்சி முனிவர் புன்சிரிப்புடன் “பெற்றம் என்றால், மாடு, எருது என்று பொருள். ஏறு உகந்து ஏறவல்லான் சிவன்” என்றதோடு
“திருவொற்றியூரில் தாம் செய்த சத்தியத்தை மீறியதால் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குக் கண் தெரியாமல் போனது. அவர் காஞ்சிக்கு வந்து, கண்ணொளி பெறப் பாடிய பதிகத்தில் “பெற்றம்” வருகிறது. யாருக்காவது கண்பார்வைக் கோளாறு ஏற்பட்டால் இந்தப் பதிகங்களைப் படித்தால் கண்பார்வை தெளிவாகும். தமிழுக்கு அத்தனை சக்தி உண்டு” என்றாராம்.
‘ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்களே என் கஷ்டம் தெரியாமல்’ என்று எண்ணியிருந்தவருக்கு, இதோ உனக்கு மருந்து என்பதாக விடை
கிடைத்ததும், பெரியவருக்கு அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்து விட்டு என்னிடம் ஓடி வந்து கேட்ட கேள்வி தான் அது. இப்பதிகம் கண் குறைப்பாடுகள் நீங்கவும் கண் பார்வை வலுப்பெறவும் மிகச் சிறந்த மருந்தாகும் எல்லோரும் படித்துப் பயன் பெறலாம்.
'சுந்தரமூர்த்தி ஒற்றியூர் ல சத்தியத்தை மீறினதாலே, ரெண்டு கண்ணும் போயிடறதா... அப்படியே ஊர் ஊரா போறார். இங்கே காஞ்சிபுரம் வந்தவர் அப்படியே சுவாமியை தரிசிச்ச மாத்ரத்திலேயே கண் பார்வை வந்துடறது. அப்போ, காஞ்சிபுரம் அப்டின்னா அம்பாள் தானே, அவளையும் உதேசிச்சிண்டு பாடின பாட்டு' என்று சொல்லி, கீழ்க்காணும் பாடலை சொல்கிறார்.
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
பொழிப்புரை :
குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந் நூல்களைக் கற்றவர்கள்,
` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும்
ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய
இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70610&padhi=061&startLimit=11
பின், நிதானமாக, திரும்பி, அந்த பாட்டியிடம், இந்த 'ஆலந்தான் உகந்து அமுது செய்தானை' பதிகத்தை தினமும் பாராயணம் பண்ணு என்று ஆசிர்வதிக்கிறார்.
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
பொழிப்புரை :
நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும் , காலகாலனும் ஆகிய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு , வியப்பு !
குறிப்புரை :
` வியப்பு ` என்பது சொல்லெச்சம் , இவ்விடத்து , சேக்கிழார் , ` விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா ` ( தி .12 ஏயர்கோன் . புரா . 286) என்று அருளுதலின் , ` ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை ` என்றதற்கு இதுவே , பொருளாதல் அறிக . ` சீலம் ` என்பது , குணம் என்னும் பொருட்டாய் ,
பெருமையைக் குறித்தது . திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு , ` ஏலவார் குழலி ` எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது . ` என்றும் வழிபட ` என இயையும் ; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க . கச்சி ஏகம்பம் , உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை , திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க . ` வழிபடப் பெற்ற ` என்றது . ` எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால் ` ( தி .4 ப .81 பா .4) என்றதுபோல நின்றது . ` வழிபடப்பெற்ற காலகாலன் ` என்றதனை , ` அந்தணர் ஆக்கொண்ட அரசன் ` என்பதுபோலக் கொள்க .
Source: http://thevaaram.org/
பாடல் எண் : 1
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே
பொழிப்புரை :
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரே , உம்மையன்றிப் பிறரை விரும்பாமலே , உமக்கே என்றும் மீளாத அடிமை செய்கின்ற ஆட்களாகி , அந்நிலையிலே பிறழாதிருக்கும் அடியார்கள் , தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாது , மூண்டெரி யாது கனன்று கொண்டிருக்கின்ற தீயைப்போல , மனத்தினுள்ளே வெதும்பி , தங்கள் வாட்டத்தினை முகத்தாலே பிறர் அறியநின்று . பின்னர் அத்துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலால் தாங்க மாட்டாது , அதனை , உம்பால் வந்து வாய்திறந்து சொல்வார்களாயின் , நீர் அதனைக் கேட்டும் கேளாததுபோல வாளாவிருப்பீர் ; இஃதே நும் இயல்பாயின் , நீரே இனிது வாழ்ந்துபோமின்!
குறிப்புரை :
இடையில் வருவித்துரைத்தனவெல்லாம் இசையெச்சங் கள் . அடியார்களது அடிமைத் தன்மையை வகுத்தருளிச் செய்தது , அவர்க்கு அருள்செய்தல் , இறைவர்க்கு இன்றியமையாக் கடனாதலை வலியுறுத்தற்கு . அல்லலை வெளியிற்சொல்லி முறையிடுதல் , தீ , சுடர் விட்டு எரிவது போலும் ஆகலின் , வெளியிடாது நெஞ்சொடு நோத லுக்கு அவ்வாறு எரியாது கனலும் தீ உவமையாயிற்று . கனலுதல் , பொதுத்தன்மையாம் . ` வாடுதல் ` என்றது , வாட்டத்தினைப் புலப்படுத்துதலை . ` ஆளாய் இருக்கும் அடியார் ` என்றதனை , ` வேண்டாதே ` என்றதன்பின்னர்க் கூட்டுக . ` வாளாஆங்கு ` என்பது குறைந்து நின்றது . ஆங்கு , அசைநிலை . ` வாழ்ந்துபோதீர் ` என்றதில் , போதல் , துணை வினை . ` நீரே வாழ்வீராக ` என்றது , ` அடியவர் கெடினும் கெடுக ; நீர் கேடின்றி வாழ்மின் ` என்றதாம் . எனவே , இது , அடியவரது கேட்டின் துணிவுபற்றி அவர் வாழ்வின்கண் எழுந்த வருத்தத்தால் , வந்தது என்பது விளங்கும் . நொந்து அருளுகின்றார் ஆதலின் , ` அடியார் ` என , தம்மையே பிறர்போல அருளிச் செய்தார் என்க .
http://thevaaram.org/
மேற் சொன்ன இரு பதிகங்கள், ஆலந்தான் உகந்து, மீளா அடிமை, சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த ஏழாம் திருமுறையில் உள்ளன .
திருக்கச்சி ஏகம்பம் எனப்படும் காஞ்சித் தலத்திலும், திருவாரூர் தலத்திலும் அருளிச் செய்யப் பட்டவை. மிக அருட் சக்தி பெற்றவை. அன்பர்கள் பலர் இந்த
பதிகங்கள் பாராயணம் செய்து, கண்கள் நல்ல ஒளியுடன், தீக்ஷண்யம் பெற்று திகழ்கிறார்கள்.
ஒரு வயதான பாட்டி, தன் பேரனுக்கு கண் பார்வை நன்றாக தெரிய வேண்டும் எனக் கேட்டபொழுது, பெற்றம் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு
ஐயன் சிறிது நேரம் விளையாடி இந்த 'ஆலந்தான் உகந்து' திருப்பதிகத்தை பாராயணம் செய்யச் சொன்னார்.
அதே போல், 'மீளா அடிமை' பதிகமும் அவருக்கு மிகப் பிடித்த பதிகம். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் எப்படி நாம் சௌஜன்யமாக நமக்கு உதவாத ஒரு நண்பர் அல்லது உறவினரிடம், 'ரொம்ப சௌக்கியமா, நன்னா இருந்துக்கோப்பா....நான் இங்கே கஷ்டப் பட்டுண்டு இருக்கேன்...நீ மட்டும் நன்னா வாழ்ந்து போ..' என்று சொல்வதில்லையா? அது போல, இறைவனிடம், 'என் கஷ்டங்கள் பார்த்து கவலைப் படாமல், எனக்கு உதவாமல், நீ மட்டும் நன்றாக வாழ். என்று சொல்வது போல், 'வாழ்ந்து போதீரே' என்று மிக அருமையாக அருளிச் செய்த பதிகம். இந்த பதிகம் பதினொராம் பாடல், திருக்கடைக் காப்பு பாடியவுடன் இறைவன் அவருக்கு இரண்டாவது கண்ணையும் திரும்ப அருளினார்.
Smt Revathi Shankaran is a well known commentator during temple festivals, well versed in tamil literature
had written an incident about Periyava 30 years back in a Tamil magazine. A lady residing opposite to her
house one day hurriedly came and asked about a Thevaram, in which the word 'petram' comes and she added that she had been to Kanchipuram to have darshan of Periyava worriying about her little girl who had severe vision problem because of small pox attack.
She was not able to reach Periyava because of the crowd. While she was very disturbed about this , suddenly Periyava asked some tamil pandit there, "Do you know in which tamil shlokam the word petram comes"? Someone said "This is Andal's Thiruppavai petram meytthunnum" another said this is in Sundaramurthi Swamigal Thevaram .
Soon Periyava with a smile, "Exactly, this pathikam was sung by Sundaramurthi Nayanar when He broke His promise to Lord Shiva in Thiruvotriyur, and was proceeding to Kanchi lost His left eye sight and got back His sight before He reached Kanchi." The lady listening to this conversation did panchanga namaskaram from there, ran home and enquired about Smt Revathi Shankaran. Petram means erudhu bull and this also was explained by Swamigal. Whoever chants this, will be rid from all eye ailments. Swamigal added that Tamil language has that much of power.
Source: A paragraph in Tamil from Shri Karthi Nagaratnam and the English translation by Smt Saraswathi Thygarajan.
5) Cancer --- shlokam from Narayaneeyam
Asmin parathman nanu paathmakalpe,
thvamithamutthapitha padmayonihi,
anantha bhooma mama roka rashim,
nirundhi vaathalaya vaasa vishno.
அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோனிஹ்
அநந்த பூமா மமரோக ராசிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ.
अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो II
अस्मिन् in this
परात्मन् O Supreme Being
ननु पाद्मकल्पे Paadma Kalpa
त्वम्-इत्थम्- Thou in this manner
उत्थापित-पद्मयोनि: caused to originate the lotus born Brahmaa
अनन्तभूमा O Thou of infinite glory!
मम रोगराशिं निरुन्धि pray, eradicate my hoards of ailments
वातालयवास विष्णो O Vishnu Dweller of Guruvaayur!
O Supreme Lord of incomprehensible powers, in this age known as the Paadma Kalpa, Thou thus brought into existence the Creator Brahmaa. O Lord Vishnu! who has manifested in the temple of Guruvaayur, please eradicate my ailments.
6) Kidney failure --- Vasambu paste
Both the kidneys did not function. Survival was very difficult. He had spent a lot of money visiting
several specialists and took the medicines prescribed by them, but all was in vain.
The man came to Periva and poured out his grief. Generally, Periyava would show kindness and compassion towards devotees who come with such problems, but on that day He spoke quite harshly.
"People commit mistakes and adharma, and come here when they have a problem. They don't realize their
faults at all. What can I do?"
Why this sudden outburst from Periyava? - no one could understand.
After a while, Periva said, "This man's ancestors had established a Trust for doing dharma activities.
They had left behind land which gave a good yield. It was intended to erect water booths (தண்ணீர் பந்தல்) and carry out the dharma activities. But this man has sold the land, and gobbled up all the money".
The man who came with kidney problems felt very guilty. "Henceforth, I will erect water booths
(தண்ணீர் பந்தல்) and carry out the dharma activities", promised the man.
Periyava at once softened!
"Are you aware of Vasambu? (வசம்பு Acorus calamus also called as Common Sweet Flag --- a medicinal plant) You will get it in traditional stores selling herbal medicines. Grind it and apply under your
belly regularly", said Periyava.
The man came again for darshan after about ten to twelve days. Even before Periva could ask,
he said "There is no trouble now!"
7) Skin disease --- வாழைத்தண்டு (Banana tree inner stem)
The lady had only her son to support her and he was afflicted with a skindisease that spread rapidly all
over his body. He had itching sensation everywhere and if he scratched it would start to bleed leaving
large patches of bruise. The mother, like every one else, came to Maha Periyava.
'I know no other refuge and cannot afford medical treatment. Maha Periyava should cure him'.
The Jagatguru asked them to stay in the mutt. He instructed the boy not to eat or drink anything,
except His utchishta. He gave instructions to the kitchen attendants too about His bhiksha, which was
the inner stem of the banana tree, boiled in water with some salt added to it. Maha Periyava would
accept this as His bhiksha and then drink some butter milk. the leftovers of both were given to the boy.
Ten days later the itching and the darkness in the skin began to subside. as the days passed the skin
was rid of the infection and became clear and healthy. after 40 days the skin regained its perfect health
and the boy looked radiant. the mother of the boy was delighted.
'I used to think that my son's affliction of the disease was because of his past sins. now, I know that it
was the merit of the good deeds of the past that gave him this infection. who could ever have the fortune of
eating and drinking Maha Periyava's utchishta for 40 days at a stretch?!
Maha Periyava, like always, said humbly ' it was all because of the medicinal qualities of the banana stem!'
Sri Maha Periyava Thiruvadigal Saranam. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.
8) Skin Disease --- Applying on onself butter that was first offered/applied to Lord Hanuman
பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்தார். அவருடைய முகம், எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தது. காரணம்? ஏதோ ஒரு வித skin disease
அவரைத் தாக்கியதால், முகம் மட்டும் பயங்கர கருப்பாக ஆகியிருந்தது. பாவம். முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?
"பெரியவாதான் எனக்கு ஒரு மருந்து சொல்லணும். வெளில போகவே ரொம்ப கஷ்டமா இருக்கு. போகாம இருக்கவும் முடியாது. எல்லா வைத்யமும் பண்ணிட்டேன்...."
மஹா வைத்யநாதம் தீர்க்காத வியாதியா!
"ஒங்காத்துப் பக்கத்ல ஆஞ்சநேயர் கோவிலோ, சன்னதியோ இருக்கோ?."
"இருக்கு பெரியவா...பெருமாள் கோவில்ல ஆஞ்சநேயர் சன்னதி இருக்கு"
"ரொம்ப நல்லதாப் போச்சு. நீ தெனோமும் அந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி, அதை வழிச்சு எடுத்துண்டு போயி, ஒன்னோட
மூஞ்சி முழுக்க தடவிண்டு கொஞ்ச நேரம் ஊறணும். அப்றம் அதை சோப்பு கீப்பு போட்டு அலம்பாம, ஒரு துணியால நன்னா தொடச்சுக்கோ!...பண்றியா?"
"பெரியவா உத்தரவு. கட்டாயம் பண்றேன் "
கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை முகத்தில் தடவிக் கொண்டு வந்தார். கொஞ்சங்கொஞ்சமாக வெண்ணையை துடைத்து
எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும் சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது!
தர்சனத்துக்கு மிகவும் சந்தோஷமாக வந்தார்.
"என்ன? த்ருப்தியா? சொஸ்தமாச்சா? எப்டி ஆஞ்சநேய வைத்யம்?.." என்று சிரித்தார்.
"ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்" என்று நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர். இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!
9) BP, Diabetes and Cancer --- Charity was the medicine suggested to a miser by Him
The man was a miser of all misers!
He was of course a wealthy man - but would not spend a penny. He had come for Periva's darshan.
With his right hand over his mouth, he started to speak emotionally. I have blood pressure & diabetes
for a long time. Now, I have been diagonised with cancer too. I am suffering a lot. Periyava must please
suggest a parikaram (remedy).
"Will you do as I say", asked Periva.
"Certainly", said the man.
"It might be difficult...".
"Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periva instructs.
All I want is to be cured of this BP, diabetes and cancer......", saying this, he wiped his eyes.
Generally, Periva had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Can Periyava let him down?
Periva said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it".
Trees bear fruits, but it never says 'this fruit belongs to me. I will only eat it".
"The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables,
but they keep nothing for themselves".
"As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others).
They say Man has got six senses. So, how much more paropakaaram must he do?
"You have lot of money - but you are neither spending it for yourself, nor are you doing any dharma
(good deeds) from it. The sins from your last birth have befallen on you in the form of diseases.
If you have to get rid of the sins, you must do a lot of good deeds".
"Have you heard about the dharmam called 'Ishta Purtham?'. Money must be spent in good deeds like
digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines
for poor orphans who are sick. When someone asks for something, he must not go
empty handed. Is this all clear?"
"You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner".
The man started weeping uncontrollably..."
He lived for many years thereafter doing a lot of dharma.
10) Stomach cancer --- Leaves of Kanagal tree
கனகல் மருத்துவம்!
இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும்
கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.
பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.
‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக்காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.
அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.
(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”
- ஸ்ரீ மடம் பாலு
- வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்
11) Soundarya Lahari
Almost all the 100 verses are very powerful and beneficial to the individual in some form or the other.
Soundaryalahari: A Digest of Kanchi Mahaswamigal's Discourses here:
https://drive.google.com/file/d/0BziSWahcH3DZYjE4SXFTU2NPSE0/edit?usp=sharing
12) "Dip Nandhiyavattai flower in milk and apply it on the head, eyes, stomach and feet!"
http://vandeguruparamparaam.blogspot.com/2014/06/leave-child-in-front-of-lord.html
13) Periyava's Anugraham for a Child with less Mental Abilities!
==============================================
A mother came with a middle aged boy for His Darshan. She could not hide her emotions. Yes, her son was less advanced in his mental skills. All medicines and mantras have been tried and were of no avail. It was enough for the mother, if he did not get hysterical. Saliva was always dripping from his mouth.
Periyava looked at him continuously for a while and then said:
‘If saliva comes in the mouth people used to say it is Vani (Goddess Saraswathi), do not worry. Have you heard of a medicine called ‘Brahmi Gritham’? It is available in Kerala. Then you buy one bottle of ‘Vallarai ghee’. Holding that you do one lakh times (Avrithi) Panchakshara Japam and then give it to him. Then do you know the nut of neem tree? Take two or three of them, crush them well, mix them with honey and apply it on his tongue."
Thus told the Compassionate Mother to Her child!
After two months, the son and the mother came to see Periyava. The boy did not have any of the hysterical behaviour that he exhibited previously. He was just staring every where, and there was no other disturbance or problem on account of him.
Heaving a big sigh of relief, the mother said,
"Due to Periyava’s anugraham my son has started reading a little!"
Periyava simply raised His hands and blessed them!